விநாயகர் சதுர்த்திக்கு இத செஞ்சிடாதீங்க!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், களிமண் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோள் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கபட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயண சாயம், எண்னெய் உள்ளிட்ட வண்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.