இந்தியாவின் முதல் ‘தேசிய விண்வெளி தினம்’!  National Space Day

Aug 23, 2024 - 18:52
 13
இந்தியாவின் முதல் ‘தேசிய விண்வெளி தினம்’!  National Space Day

இந்தியாவின் முதல் ‘தேசிய விண்வெளி தினம்’! 

இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. 40 நாட்கள் பயணித்த சந்திரயான் 3, ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
முதலில் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்திற்கு அருகே 600 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கி சாதனை படைத்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, 4-வது நாடாக நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது இந்தியா.
இந்த சாதனையை குறைந்த பட்ஜெட்டில் இஸ்ரோ அடைந்தது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு, பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. 14 நாட்கள் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்த பிரக்யான் ரோவர், அனைத்து தகவல்களையும் அனுப்பி உலக நாடுகளை பிரமிக்க வைத்தது. நிலவின் வெப்பநிலை, ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், சிலிக்கான் போன்ற தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்தது.
சல்பர் இருப்பதை முதல் முறையாக கண்டுபிடித்த பெருமையும் இந்தியாவுக்கு. இஸ்ரோவின் சந்திரயான் 3 மிஷன் பல மர்மங்களை அவிழ்த்தது. இந்தியா, ஆகஸ்ட் 23-ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக அறிவித்தது. சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதியை சிவசக்தி பாயிண்ட் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சந்திரயான் 3 குறித்த தகவல்கள் ட்ரெண்டாகி வருகிறது. சந்திரயான் 3 வெற்றிக்கு சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு ‘உலக விண்வெளி விருது’ அறிவித்துள்ளது. அக்டோபர் 14-ஆம் தேதி இஸ்ரோவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.