Telegram CEO Pavel Durov Arrested In France
Telegram CEO Pavel Durov Arrested In France
பிராங்கோ-ரஷ்ய கோடீஸ்வரர் பாவெல் துரோவ் (39) அஜர்பைஜானில் இருந்து தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் பயணம் செய்தபோது, பாரிசுக்கு அருகே உள்ள பிரான்ஸ் போர்கெட் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால், பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்தனர்.
பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்ததாவது, “இணையதளங்களில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக கூறி பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டார்.” டெலிகிராம் செயலியில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்க தவறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துபாயை தளமாகக் கொண்ட டெலிகிராம் செயலியை ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த துரோவ் நிறுவினார். 2014 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறிய அவர், சில எதிர்ப்புகள் காரணமாக தனது டெலிகிராம் செயலியை விற்பனை செய்தார். தற்போது, 15.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட துரோவ், டெலிகிராம் செயலியை நிர்வகித்து வருகிறார்.
900 மில்லியன் பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தொடர்பாக, பாவெல் துரோவ் கைது குறித்து உடனடியாக பதிலளிக்கவில்லை. இதேபோல், பிரெஞ்சு உள்துறை அமைச்சகமும் காவல்துறையும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பாரிஸில் தேடப்படும் நபர் என்பதை அறிந்து பாவெல் துரோவ் ஆச்சரியம் அடைந்ததாக ஃபிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், சிறார்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் ஒரு நிறுவனம், மோசடி, போதைப்பொருள் கடத்தல், இணைய அச்சுறுத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், துரோவ் ஒருங்கிணைக்கும் டெலிகிராம் நிறுவனம் பயன்படுவதாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது