கங்கனா ரணாவத்துக்கு பாஜக தடாலடி!

Aug 27, 2024 - 17:48
 18
கங்கனா ரணாவத்துக்கு பாஜக தடாலடி!

பாஜகவின் கொள்கை குறித்து பேச, அக்கட்சியின் எம்.பி. கங்கனா ரணாவத்துக்கு அனுமதி இல்லை என பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கங்கனா ரனாவத் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார், இந்த பதிவில், பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் தொல்லைகளும், கொலைகளும் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

அந்த போராட்டத்தை தடுக்க பிரதமர் மோடி தலைமையில் வலுவான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஒருவேலை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் பஞ்சாப்பை வங்கதேசமாக மாற்றிருப்பார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், இது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், அவரது கருத்தில் உடன்பாடு இல்லை என பாஜக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனா ரனாவத்தின் கருத்து, பாஜகவின் கருத்து அல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், பாஜக கொள்கை விவகாரத்தில் அறிக்கை வெளியிடவோ அனுமதியோ, அதிகாரமோ கங்கனா ரனாவத்துக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடக் கூடாது என்றும் கங்கனா ரனாவத்துக்கு பாஜக கட்டுப்பாடு விதித்துள்ளது.