சர்ச்சைக்கு பிறகு திறப்பு!
பர்கூர் அருகே பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிக்கிய தனியார் பள்ளி 10 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் போலியான என்சிசி முகாம் நடத்தி அதில் கலந்து கொண்ட 13 பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்தும்,
12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான சிவராமன் உட்பட பள்ளி தாளலர், முதல்வர், ஆசிரியர்கள் என 11 பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிறப்பு புலாண்ய்வு குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நேற்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.