Radhika Sarathkumar ஆவேசம்!..| Vishal | Kerala Issue | Hema Committee Report

Sep 3, 2024 - 17:58
 19
Radhika Sarathkumar ஆவேசம்!..| Vishal | Kerala Issue | Hema Committee Report

Hema Committee Report

மலையாளத் திரைத்துறையில் நிலவி வரும் பாலியல் சர்ச்சை குறித்து நடிகை ராதிகா  சரத்குமார் சமீபத்தில் பேசியிருந்தார். அதில் சினிமாவிற்கு வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது இன்றோ, நேற்றோ நடைபெறும் பிரச்சனை கிடையாது. இது 80s களில் இருந்தே நடந்து வரும் பிரச்சனை தான். நானும் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் அமைதியாக அடக்க ஒடக்கமாக இருந்தேன். ஆனால், இந்த திரைத் துறையில் நடைபெறும் சில விஷயங்களை பார்த்த பிறகு, என்னை நானே கடினமானவளாக மாற்றிக் கொண்டேன். அதுவே எனக்கு பாதுகாப்பு வளையமாக இருந்தது. அதுமட்டுமின்றி பல நடிகைகள் , உங்களுடன் இருந்தால் எங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று கூறி என்னுடன் தங்கியுள்ளார்கள். உடனே இதையெல்லாம் அப்பொழுதே சொல்லி இருக்கலாம் என பல பேர் கூறுவார்கள். ஆனால், சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகாரை தெரிவித்தார். அதனுடைய தற்போதைய நிலைமை என்ன? என ராதிகா சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் , இந்த விவகாரத்தில் , நடிகர் விஷால் யார் வேண்டுமானாலும், யாரைப் பற்றியும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என கூறியிருக்கிறார். அந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களை ஒரு பெண் அப்படிச் சொல்லிவிட்டார். என்பதற்காக, நீங்கள் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் தனி நபராக அவரது கூறியிருந்தால் பரவாயில்லை. அவர் ஒரு பொறுப்பில் இருக்கிறார். அப்படி பொறுப்பில் இருக்கும் பொழுது, அவர் அப்படி சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே, பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை முன்வந்து துணிச்சலாக எதிர்க்க வேண்டும் என ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.