"LIK" திரைப்படத்தின் First Single Update! Pradeep Ranganathan | Vignesh Shivan | Anirudh

Oct 15, 2024 - 18:31
 18
"LIK" திரைப்படத்தின் First Single Update! Pradeep Ranganathan | Vignesh Shivan | Anirudh

"LIK" திரைப்படத்தின் First Single Update! Pradeep Ranganathan | Vignesh Shivan | Anirudh

விக்னேஷ் சிவன், காத்துவாக்குல ரெண்டு காதல் வெற்றிக்குப் பிறகு, அவரது அடுத்த திரைப்படமான "LIK" (Love Insurance Kompany) படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசையை அனிருத் இசையமைக்கிறார்.
 
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை "7 Screen Studio" நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் பல பெரிய கோலிவுட் படங்களை முன்பே தயாரித்துள்ளது. அவர்களது கடைசி திரைப்படம் தளபதி விஜயின் "Leo" ஆகும்.
 
ஆரம்பத்தில், இப்படம் "LIC" (Love Insurance Company) என்று பெயரிடப்பட்டது. ஆனால், சில பிரச்சினைகளால் படத்தின் தலைப்பை "LIK" என மாற்றப்பட்டது. இப்போது அண்மைத் தகவலாக, நாளை அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் முதல் சிங்கிள் "Dheema" பாடலை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
 
அனிருத் இசையில் வெளிவரும் இந்த பாடல், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. "LIK" படத்தின் எடிட்டிங், படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.