தீபாவளி ரேஸில் இணைந்த கவினின் Bloody Beggar!  

Sep 4, 2024 - 01:03
 24
தீபாவளி ரேஸில் இணைந்த கவினின் Bloody Beggar!  

தீபாவளி ரேஸில் இணைந்த கவினின் Bloody Beggar!  

நடிகர் கவின் டாடா படத்தின் மூலம் சினிமா துறையில்  பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான "ஸ்டார்" படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், "Bloody Beggar" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நெல்சனின் உதவி இயக்குனரான சிவபாலன் இயக்கியுள்ளார். மேலும், இத்திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தீபாவளியன்று தான் சிவகார்த்திகேயனின் "அமரன்", துல்கர் சல்மானின் "லக்கி பாஸ்கர்",  மேலும் ஜெயம் ரவியின் "பிரதர்" படம் வெளியாகும் என அறிவித்த நிலையில், தற்போது இந்த தீபாவளி ரேசில் கவின் உடைய "பிளடி பெக்கர்" படமும் இணைந்துள்ளது.