நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததன் காரணம்! | Ajith Kumar Simplicity

Sep 17, 2024 - 23:57
 8
நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததன் காரணம்! | Ajith Kumar Simplicity

நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததன் காரணம்! | Ajith Kumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாகவும், இன்னும் அந்த படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருப்பதாகவும்  தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிடலாம் என படக் குழு திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது இந்த விடாமுயற்சி படம் பொங்கல் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது மிகவும் தீவிரமாக குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

புகழ், பாராட்டுகளை விரும்பாத நடிகர்!

நடிகர் அஜித் மற்ற நடிகர்களை போல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். மேலும் இவருக்கு ரசிகர் மன்றமே கிடையாது. ரசிகர்களுடனும் உரையாட மாட்டார். இந்த நிலையில் அவர் ஏன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்பதற்கான காரணத்தை அஜித்தே கூறியுள்ளார்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு அஜித் சொன்ன காரணம்!

பிரபல மூத்த பத்திரிக்கையாளர் மை.பா.நாராயணன் அஜித்தைப் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். இவர் அஜித்துடன் "நேர்கொண்ட பார்வை" படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திடம் " ஏன் சார் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துக்க மாட்றீங்கனு" கேட்டாராம். அதற்கு நடிகர் அஜித், "எல்லாரும் என் பின்னாடி வரது, எனக்கு ரசிகர் மன்றம் வைக்கிறது விட  அவங்களோட அப்பா, அம்மா பின்னாடி தான் போகணும். அவங்கள தான் அதிகமா நேசிக்கணும். அத நம்ம மாத்திட கூடாதுன்னு தான் ரசிகர் மன்றத்தையே கலைச்சிட்டேன். எல்லாரும் சந்தோஷமா நல்லா இருக்கணும்" அப்படின்னு அஜித் சொன்னாராம்.  இப்படி புகழ் ,பாராட்டு எதுவுமே வேணாம்னு சொல்லிட்டு மத்தவங்கள பத்தி யோசிக்கிற  ஒரு நல்ல மனிதர் தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது என மூத்த பத்திரிக்கையாளர் மை. பா. நாராயணன் கூறியிருக்கிறார்.