தனது பாணியில் கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து

May 9, 2024 - 01:10
 10
தனது பாணியில் கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து

தனது பாணியில் கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து 

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரிக்கிடையே சில வருடங்களாக கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இளையராஜா இசை அமைத்தவருக்கு தான் பாடல் சொந்தமானது என்று வழக்கு தொடுத்திருந்தார். அதையடுத்து வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது இசை பெரியதா? மொழி பெரியதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இசையமைத்தவருக்கு மட்டும் பாடல் சொந்தமானது அல்ல என்றும் அந்தப் பாடலின் கவிஞர் மற்றும் பாடியவர்களுக்கும் பாடல் சொந்தமானது தான் என்று பேசியிருந்தார்.

வைரமுத்து பேசிய அடுத்த நாளே கங்கை அமரன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் இளையராஜாவுக்கு ஆதரவாக வைரமுத்துவை கண்டித்து அதில் பேசியிருந்தார். வைரமுத்து இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணமே நாங்க போட்ட பிச்சை தான். நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர் ஒரு ஆளாகவே ஆகி இருக்க மாட்டார். இளையராஜா தனது இசையை கொடுக்க, அதில் வந்து அமர்ந்து கொண்டு அந்த நிலம் உருவானது என்னால்தான் என்று மடத்தனமாக கூறுகிறார் என்று வைரமுத்துவை குறிப்பிட்டு திட்டி இருந்தார். தற்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக வைரமுத்து அவரது எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று அவருடைய கவிதை மொழியில் பதில் கூறியிருக்கிறார். இது இது தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.