ரூ.35 கோடி மதிப்பிலான கண்டெய்னர் திருட்டு! Chennai Port
ரூ.35 கோடி மதிப்பிலான கண்டெய்னர் திருட்டு! Chennai Port
சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று சென்னை துறைமுக வளாகத்தில் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, கன்டெய்னர் லாரிகள் வாயிலாக அனுப்பும் பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட ரூ.35 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுப்புவதற்காக செப்டம்பர் 7ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு நிறுவனம், அந்த கன்டெய்னர் பெட்டியை எடுத்து வர, செப்டம்பர் 11ம் தேதி டிரைலர் லாரியை துறைமுகத்திற்கு அனுப்பியது. லாரி ஓட்டுனர், சம்பந்தப்பட்ட பணிமனைக்கு சென்று பார்த்தபோது, அந்த கன்டெய்னரை காணவில்லை என புகார் அளித்துள்ளார். பின், இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சரக்குகளைக் கையாளும் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் இளவரசன் திருட்டு கும்பலுடன் சேர்ந்து கன்டெய்னரை டிரைலர் லாரியில் கடத்தி சென்று திருவள்ளூரில் பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து டிரைலர் லாரி ஒட்டுநர் மணிகண்டன் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இளவரசன் உட்பட தலைமறைவாக உள்ள மூவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.