டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

Sep 24, 2024 - 12:37
 3
டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

அமெரிக்காவில் 3 நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டார்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, குவாட் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

நியூயார்க்கில், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

.நா. சபையில் எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்றார். அமெரிக்கப் பயணத்தின்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸ், நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, நியூயார்க்கில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.