வரி பத்தின கவலையே வேண்டாம்…. மோடி சொன்ன GOOD NEWS!
சுற்றுலாத் துறை ஊக்கம் பெறும்

வரி பத்தின கவலையே வேண்டாம்…. மோடி சொன்ன GOOD NEWS!
காங்கிரஸ் ஆட்சியில் பற்பசை, சோப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட 27 சதவீதம் வரி விதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்து அவர் பேசினார்.
அப்போது ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் பெரும்பாலான குடும்பங்களின் அன்றாட செலவு குறைந்திருப்பதாக கூறிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் மருந்து, காப்பீடு மீது அதிக வரி விதிக்கப்பட்டதாக விமர்சித்தார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் தற்போது அவை மலிவு விலையில் கிடைப்பதாகவும், கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன் பற்பசை, சோப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 27 சதவீதம் வரி விதிக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
வரும் 22-ஆம் தேதிக்குப் பிறகு சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை குறையும் என கூறிய பிரதமர் மோடி, ஸ்கூட்டர் மற்றும் கார் நிறுவனங்கள் ஏற்கனவே விலையைக் குறைத்ததை சுட்டிக்காட்டினார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக ஹோட்டல் கட்டணம் மீதான வரி வீதம் 5 சதவீதமாக குறைந்ததால், சுற்றுலாத் துறை ஊக்கம் பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.