வைரமுத்து வெளியிட்ட பதிவால் சர்ச்சை!

Sep 25, 2024 - 21:24
 22
வைரமுத்து வெளியிட்ட பதிவால் சர்ச்சை!

சமீபத்தில் சுதித்ரா சர்ச்சைக்குறிய சில கருத்துக்களை வெளியிட்டு பேசும்பொருளாகி இருந்தார். அதே போல் 2ஆண்டுகளுக்கு முன்னதாக பாடகி சின்மயி வைரமுத்து குறித்து ஒரு பாலியல் புகார் அளித்திருந்தார் தற்போது சுசித்ராவும் வைரமுத்து குறித்து அதே பாலியல் புகாரை அளித்துள்ளார்.  

இதற்கு பதிலளிக்கும் வகையில் வைரமுத்து ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், வாழ்வில் தோல்விகளாலும், பலவீனமான இதயத்தாலும், நிறைவேறாத ஆசைகளாலும்  மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூலை பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் தான் இவ்வாறு பிறர் மீது வன்மங்களை கூறுவார்கள் எனவும்,

பைத்தியம் போல் சில நேரமும் பைத்தியம் தெளிந்தது போல் பேசும் இவர்களுடைய நோய்க்கு மெசனியா டெலுசினியல் டிச்சார்டர் என்று பெயர் இவர்கள் தண்டிக்க கூடியவர் அல்ல, இரக்கத்திற்கு உரியவர்கள். அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள். உரிய சிகிச்சை பெற்று கொள்ள வேண்டுமென வைரமுத்து அந்த பதிவில் கூறியுள்ளார்.

இதற்கு சுசித்ராவும் ஒரு பாடலை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.