அமெரிக்காவின் சதி தான் காரணம்!
வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் உள்ள மார்ட்டின் தீவுகளை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தான் ஒத்துழைக்காததால் தான் மறைமுகமாக ஆட்சியைக் கவிழ்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பதவி விலகிய பின் முதல்முறையாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மார்ட்டின் தீவுகளையும் வங்காள விரிகுடாவையும் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்திருந்தால் நான் பதவியில் நீடித்திருக்க முடியும். ஆனால்,
அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை. ஒரு போதும் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு விட்டுத்தர இயலாது என கூறியிருந்தார்.
ஒருவேளை பிரதமராக பதவியில் நீடித்திருந்தால் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்திருக்கும். அதனால் மேலும் பலர் உயிரிழக்கக்கூடும். நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டிருக்கும். எனவே தான் பதவியை ராஜினாமா செய்ததாகவும், போராட்டம் நடத்தும் மாணவர்களை பயங்கரவாதிகள் என ஒரு போதும் தான் கூறவில்லை எனவும். அப்போது வெளியான காணொலிகளை மீண்டும் பார்த்தால் உண்மை புரிய வரும் எனவும் கூறியுள்ளார்.