ரஜினியின் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு! Rajinikanth | Vettaiyan

ரஜினியின் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு! Rajinikanth | Vettaiyan
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படம் வருகின்ற அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் என்கவுண்டர் குறித்து சில வசனங்களும் இடம்பெற்றுள்ளது.
வேட்டையன் படத்திற்கு இடைக்காலத் தடை!
இந்த நிலையில், வேட்டையன் படத்தை வெளியிட தடை கோரி, பழனிவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். அதில், வேட்டையன் படத்தில் இடம் பெற்றிருக்கும் என்கவுன்டர் சம்பந்தப்பட்ட வசனங்களை நீக்க வேண்டும் அல்லது மியூட் செய்ய வேண்டும் என்றும் அதுவரை அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வேட்டையின் படத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் மனு குறித்து தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், லைகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.