திமுக கொள்கை பரப்புச் செயலாளரை அறிவித்த துரைமுருகன்! இனி நடப்பதை மட்டும் பாருங்க…
என்னை மக்களுடன் பேச வைத்ததற்கு நன்றி!

திமுக கொள்கை பரப்புச் செயலாளரை அறிவித்த துரைமுருகன்! இனி நடப்பதை மட்டும் பாருங்க…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எழிலரசன், மாணவர் அணிச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாணவர் அணித் தலைவராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை அப்பொறுப்பில் இருந்து விலக்கி மாணவர் அணிச் செயலாளராக துரைமுருகன் நியமித்துள்ளார்.
திமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து எழிலரசன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்களுடன் உறவாடிக் கொண்டிருந்த எனக்கு, மக்களிடன் உரையாற்றுகிற வாய்ப்பினை திமுக தலைவரின் குரலாய், இளந்தலைவரின் எண்ணத்தை ஒலிக்கின்ற வகையில் கொள்கை பரப்புச் செயலாளர் எனும் உன்னத பொறுப்பினை வழங்கிட்ட தலைவருக்கு நெஞ்சார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த என்னை மக்களுடன் பேச வைத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.