ஆம்ஸ்ட்ராங் வழக்கு தீவிரம்!

Oct 3, 2024 - 19:07
 12
ஆம்ஸ்ட்ராங் வழக்கு தீவிரம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சென்னை காவல்துறை.

அதன்படி, 5 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சென்னை காவல்துறை.  இதில், பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள், சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை  குற்றப்பத்திரிக்கையில் இணைத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 28 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இருவர் தலைமறைவாக இருந்து வருவதால் போலீசார் தீவீர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் 2 பேரையும் சேர்த்து மொத்தம் 30 பேர் மீது இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செம்பியம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பணம் மற்றும் தூக்கி வீசப்பட்ட செல்போன்கள், ஆயுதங்கள் என அனைத்து சொத்துக்கள் குறித்த விவரங்களும் இந்த குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, இரு தரப்பு வாதங்களும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.