தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! Chennai Rains | Tamilnadu
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை: சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! Chennai Rains | Tamilnadu
கனமழை வரக்கூடியதைக் கருத்தில் கொண்டு, சென்னையைச் சேர்ந்த பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அக்டோபர் 15-ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு மேல, ஐடி நிறுவன ஊழியர்களை அக்டோபர் 15 முதல் 18 வரை வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொல்லுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர்: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
சென்னை மாநகராட்சி ஆணையர் கூட்டத்தில், “மொத்தம் 990 மின்பம்புகள் மற்றும் 57 டிராக்டர்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 36 மோட்டார் படகுகள், 46 மெட்ரிக் டன் குளோரின் பவுடர், 25 மெட்ரிக் டன் சுண்ணாம்பு பவுடர் மற்றும் பெனால் ஆகியவையும் தயார் நிலையில் இருக்கின்றன. 169 முகாம்கள், தேவையான அளவில் சமையல் இடங்கள், மீட்பு நடவடிக்கைகளுக்கு 59 ஜேசிபி, 272 மரக்கட்டர்கள், 176 நீர் உறிஞ்சிகள், 130 ஜெனரேட்டர்கள் மற்றும் 115 லாரிகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
அதே போல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் பகுதிகளில் எடுத்த நடவடிக்கைகளை விளக்கினார்கள்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: மழைக்கான முழு முன்னெச்சரிக்கை திட்டங்கள்
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மழைக்கான முழு முன்னெச்சரிக்கை திட்டங்களை எடுத்திருக்கிறோம். சென்னை மற்றும் திருவள்ளூரில் கனமழை எதிர்பார்ப்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதுமாதிரி, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து சில பகுதிகளில் நீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பொன்னேரி ரெயில்வே சப்வேயில் நீர் தேங்கியது. இதனால, உள்ளூர் நிர்வாகம் நிலைமையை கணக்கிட்டுக் கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்திய வானிலை மையம் தெரிவிப்பதாவது, தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது. இது வடமேற்கு திசைக்கு நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு கனமழையை ஏற்படுத்தும்.
“தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அக்டோபர் 12 முதல் 16-ஆம் தேதி வரை கனமழை பெய்யும். குறிப்பாக அக்டோபர் 14, 15-ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும்” என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், “தர்மபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்” என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கு அக்டோபர் 17 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.