தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி | Archana Patnaik IAS

தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி | Archana Patnaik IAS
அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாடு புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் இருந்த சத்ய பிரத சாஹூ சமீபத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலிருந்து, அர்ச்சனா பட்நாயக் தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். சத்ய பிரத சாஹூ, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அர்ச்சனா பட்நாயக் நேற்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், ஒடிசாவைச் சேர்ந்தவராவார். தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.