2 மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் நீக்கம்!

Aug 4, 2024 - 02:29
Sep 9, 2024 - 21:19
 27
2 மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் நீக்கம்!

சமீப காலமாக ஜம்முகாஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அவர்களது பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களின் சொந்த மாநில கேடருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாகவே ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. இதன் காரணமாக ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான பிஎஸ்எஃப் டிஜி, சிறப்பு டிஜிபி ஆகியோரை நீக்கியுள்ளது.

நீக்கப்பட்ட உத்தரவையடுத்து இவர்கள் இருவரையும் அவர்களது கேடருக்கு திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், ஒன்றிய அரசின் இந்த திடீர் முடிவுக்கு, நேரடியாக எந்த காரணமும் இதுவரைதெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், பிஎஸ்எஃப் டிஜி நிதின் அகர்வால், அவரது பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் கேரளா கேடர் அதிகாரி என்பதால், அவரது சொந்த கேடர் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

சிறப்பு டிஜியாக இருந்த ஒய்.பி.கரானியாவும் நீக்கப்பட்டு, அவரது ஒடிசா கேடருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். ஜம்மு செக்டாரில் ஊடுருவல் வழக்குகள் அதிகரித்து வருவதால், பிஎஸ்எஃப் டிஜி நிதின் அகர்வால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்ஓசியின் சில பகுதிகளை பிஎஸ்எஃப் பாதுகாக்கிறது என்று தெரிவித்தன.