தேர்தல் நடத்தல் விதியில் திருத்தம் – மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

Dec 23, 2024 - 16:19
Dec 23, 2024 - 17:17
 5
தேர்தல் நடத்தல் விதியில் திருத்தம் – மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்

தேர்தல் நடத்தல் விதியில் திருத்தம் – மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

தேர்தல் நடத்தல் விதிகளில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்த்ததால் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதி திருத்தம் மூலம் நேர்மையான, நியாயமான தேர்தலை உருக்குலைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மக்களாட்சிக்கு விரோதமான இந்த தாக்குதலை எதிர்க்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தலை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 பிரிவில் 2ல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை பாஜக அரசு எதிர்நோக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சிசிடிவி காட்சி பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து சிசிடிவி பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக அடிப்படையான கூறுகள் ஒன்றை மத்திய பாஜக அரசு அழித்துள்ளது எனவும்  

மகாராஷ்டிராவில் பொய்யான வெற்றிக்கு கிடைத்த எதிர்ப்புகளால் ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலி எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.