ரோகித்துக்கு நன்றி தெரிவித்த சாம்சன்!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி

Oct 9, 2025 - 13:06
 3
ரோகித்துக்கு நன்றி தெரிவித்த சாம்சன்!

ரோகித்துக்கு நன்றி தெரிவித்த சாம்சன்!

 

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி என சஞ்சு சாம்சன் பெருமிதம் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய சஞ்சு சாம்சன், டி20 உலகக்கோப்பையை வெல்லும் வெற்றி பார்முலாவை கண்டறிய இந்திய அணிக்கு 16 ஆண்டுகள் ஆனது அதற்கு ரோகித் பையாவிற்கு நன்றி என கூறினார்.

அவர் கூறியதை போல 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு 11 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.

11 ஆண்டுகளாகக் கோப்பைக்காகக் காத்திருந்த இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இரண்டையும் கேப்டனாக ரோகித் சர்மா வென்று கொடுத்தார்.

இந்த 2 கோப்பைகளையும் வெறும் 8 மாத இடைவெளியில் இந்திய அணி தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.