ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி | G20 Summit | Modi Departs to South Africa for G20 Meet
Modi Departs for South Africa for G20 Meet
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி | G20 Summit | Modi Departs to South Africa for G20 Meet
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் 20வது உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை அன்று தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். இம்மாநாட்டில் மூன்று முக்கிய அமர்வுகள் நடைபெறவுள்ளன, இதில் காலநிலை மாற்றம், எரிசக்தி போன்ற உலகளாவிய சவால்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் முக்கிய கருத்துகள் மற்றும் பங்களிப்புகளை அவர் முன்வைப்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநாட்டின் போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார். மேலும் இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா தலைவர்களின் சிறப்பு கூட்டத்திலும் அவர் பங்கேற்க இருக்கிறார். இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களைக் கண்டித்து, இம்மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது
