கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்!

பெண்ணிடம் ஒருமையில் பேசியுள்ளார்

Apr 11, 2025 - 13:49
 3
கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்!

கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்!

திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்படுகிறார். அமைச்சர் பொன்முடி வகித்து வந்த திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு.

தந்தை பெரியார் திராவிட கழக நிகழ்ச்சியில் பாலியல் தொழிலாளி தொடர்பாக ஆபாசமாக, கீழ்த்தரமாக பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசியிருந்த அமைச்சர் பொன்முடிக்கு கண்டனம் வலுத்து வந்த நிலையில் முதல்வர் நடவடிக்கை.

அமைச்சர் பொன்முடிக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடியின் கொச்சையான பேச்சை எந்த காரணத்திற்காகவும் ஏற்க முடியாது எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மகளிர் விடியல் பயணம் குறித்தும் ஓசி பேருந்து என ஏற்கனவே விமர்சித்து இருந்தார் அமைச்சர் பொன்முடி.

மாநில அளவில் திமுக 5 பொதுச்செயாளர்கள் உள்ளனர்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி சைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் ஆபாசமாக பேசியிருந்தார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகவும் தகவல்.

முன்னதாக, பட்டியலின ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை சாதியை குறிப்பிட்டு மேடையிலேயே பேசியிருந்தார் பொன்முடி.

கோரிக்கைகளை கூற வந்த பெண்ணிடம் ஒருமையில் பேசியுள்ளார் பொன்முடி.

பல்வேறு இடங்களில் பெண்கள் குறித்து சர்ச்சையான விதத்தில் ஒருமையிலும் பேசி வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் பெயரிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.