யாரும் சிம்பொனி இசையை டவுன்லோட் செய்ய கூடாது......சென்னை திரும்பிய இளையராஜா திட்டவட்டம்!

நேரடியாக இந்த இசை அனுபவத்தை நீங்கள் அனைவரும் கேட்க வேண்டும்

Mar 10, 2025 - 10:40
 4
யாரும் சிம்பொனி இசையை டவுன்லோட் செய்ய கூடாது......சென்னை திரும்பிய இளையராஜா திட்டவட்டம்!

யாரும் சிம்பொனி இசையை டவுன்லோட் செய்ய கூடாது!

சென்னை திரும்பிய இளையராஜா திட்டவட்டம்...

சிம்பொனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது – இசையமைப்பாளர் இளையராஜா

லண்டனில் மார்ச் 8-ம் தேதி சிம்பொனி இசையை அரங்கேற்றிய பின் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் இளையராஜா.

சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக சார்பில் மாநில துணை தலைவர் கரு. நாகராஜன், விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு மற்றும் இயக்குனர் பேரரசு உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இளையராஜா, மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு என்னை நீங்கள் வழியனுப்பி வைத்ததே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள்புரிந்தான்.  

அரசு மரியாதையுடன் முதல்வர் என்னை வரவேற்றது எனது நெஞ்சத்தை நெகிழ வைத்தது தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்திக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

சிம்பொனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது நேரடியாக இந்த இசை அனுபவத்தை நீங்கள் அனைவரும் கேட்க வேண்டும்.

ஏனென்றால், சிம்பொனி இசையை கேட்கும் போது 80 வாத்திய கருவிகளும் கேட்கும் ஆனால் மற்ற ஒலிப்பதிவுகளில் அவ்வாறு கேட்காது.

குறிப்பாக, இந்த சிம்பொனி இசையை துபாய், பாரீஸ், ஜெர்மன் உள்ளிட்ட 13 நாடுகளில் அரங்கேற்ற தேதி குறித்தாகிவிட்டது.

நான் சாதாரண மனிதனை போல தான் இங்கே வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்னைப்பற்றி எனக்கு ஒரு எண்ணமும் கிடையாது.

என்னை இசை தெய்வம், கடவுள் என்று சொல்லும் போது இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிவிட்டீர்களே என்று தான் தோன்றும் இந்த இசை உலகெங்கும் கொண்டு செல்லப்படும். 

82 வயதாகிவிட்டது இனிமேல் இளையராஜா என்ன செய்யப்போகிறார் என்று நினைக்காதீர்கள் நீங்கள் நினைக்கிற அளவுக்கு நான் இல்லை

பண்ணைப்புரத்தில் இருந்து புறப்பட்ட போது வெறும் காலோடு தான் நடந்தேன் இப்போது இந்த இடத்தில் நிற்கிறேன் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்றும் பேட்டியளித்துள்ளார்.