இந்தியருடன் மோதும் பாகிஸ்தானியர்!

மலையாளி வேட்பாளர் இவர் மட்டும் தான்

Apr 7, 2025 - 12:59
 1
இந்தியருடன் மோதும் பாகிஸ்தானியர்!

இந்தியருடன் மோதும் பாகிஸ்தானியர்!

கனடா பார்லிமென்ட் தேர்தலில், கேரளா மாநிலத்தை சேர்ந்த 51 வயதான சட்ட ஆலோசகர் பெலண்ட் மேத்யூவை எதிர்த்து, பாகிஸ்தானை சேர்ந்த, லிபரல் கட்சி எம்.பி., சல்மா ஜாஹித் போட்டியிடுகிறார்.

வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தாண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

 

இதற்கிடையே, மக்கள் செல்வாக்கு சரிந்ததால், பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, ஆளும் லிபரல் கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.  

கட்சியின் பெரும்பான்மையினர் ஆதரவுடன், கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

பின்னர் பார்லிமென்டை கலைத்து, ஏப்., 28ல் தேர்தலை நடத்துவதாக கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்திருந்திருந்தார்.

 

தற்போது தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் டான் வேலி ஈஸ்ட் தொகுதியில், கேரளா மாநிலத்தை சேர்ந்த 51 வயதான சட்ட ஆலோசகர் பெலண்ட் மேத்யூ போட்டியிடுகிறார்.

 

கனடா தேர்தலில் போட்டியிடும் மலையாளி வேட்பாளர் இவர் மட்டும் தான்.

 

மேத்யூவை எதிர்த்து, பாகிஸ்தானை சேர்ந்த லிபரல் கட்சி எம்.பி., சல்மா ஜாஹித் போட்டியிடுகிறார்.

பெலண்ட் மேத்யூ, எர்ணாகுளம் செயிண்ட் ஆல்பர்ட்ஸ் கல்லூரியில் கணிதத்தில் பி.எஸ்.சி., பட்டம் பெற்றார். குவைத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 2008ல் கனடா வந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றால், மலையாளி ஒருவர் கனடா பார்லிமென்ட் எம்.பி., என்ற பெருமையை பெறுவார்.

* இதுவரை, மலையாளி ஒரே ஒருவர் மட்டுமே பார்லிமென்டில் இடம்பிடித்துள்ளார்.

* கல்லூரி நாட்களில் மாணவர் அரசியலில் தீவிரமாகப் பங்கேற்ற மேத்யூ, எப்போதும் மக்களின் ஆளுமையாகக் கருதப்பட்டார்.

* குவைத் மற்றும் கனடாவில் மனிதவள மேலாண்மையில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தனது மனைவி டீனாவுடன் சேர்ந்து ஒரு சட்ட ஆலோசனை நிறுவனத்தை நிறுவினார்.

* கடந்த மூன்று முறை இந்த தொகுதி லிபரல் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தாலும், மேத்யூவும் அவரது கட்சியும் இந்த முறை வெற்றி பெற போராடி வருகின்றனர்.

* கனடா பார்லிமென்ட் தேர்தலில் முக்கிய கட்சிகளில் லிபரல் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி, பிளாக் கியூபெகோயிஸ் மற்றும் பசுமைக் கட்சி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.