கே.என். ராமஜெயம் உட்பட கே.என்.நேரு தொடர்புடைய தமிழகம் முழுவதிலும் 12 இடங்களில் தீவிர சோதனை!

ஜிஎஸ்டி முறையாக செலுத்தவில்லை

Apr 7, 2025 - 12:26
 2
கே.என். ராமஜெயம் உட்பட கே.என்.நேரு தொடர்புடைய தமிழகம் முழுவதிலும் 12 இடங்களில் தீவிர சோதனை!

கே.என். ராமஜெயம் உட்பட கே.என்.நேரு தொடர்புடைய தமிழகம் முழுவதிலும் 12 இடங்களில் தீவிர சோதனை!  

திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

சென்னையில் கே.என்.நேருவின் மகன் எம்.பி அருண் மற்றும் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்சி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை.  

அமைச்சர் நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், சகோதரி உமா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

இன்று காலை 7 மணியில் இருந்தே சோதனை தொடங்கிவிட்டது சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

அதே போல், சென்னையில் மட்டுமே 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது.

சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜிஎஸ்டி முறையாக செலுத்தவில்லை என்ற காரணத்தை அடிப்படையாக கொண்டு இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் கூறப்படுகிறது.