சபாநாயகர் அப்பாவு செய்தது ஜனநாயகப் படுகொலை!

ஆண்டுக்கு ரூ.5000-க்கும் மேல் ஊழல் நடைபெறுகிறது

Apr 22, 2025 - 15:26
 3
சபாநாயகர் அப்பாவு செய்தது ஜனநாயகப் படுகொலை!

சபாநாயகர் அப்பாவு செய்தது ஜனநாயகப் படுகொலை!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக துறை சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) பதிலளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்

இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதியளிக்க மறுத்ததால், சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்.எல்.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை 30 நிமிடங்கள் இன்று சந்தித்து பேசியிருக்கிறீர்கள். முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்கப்பட்டிருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பாமக எம்.எல்.-க்கள் கூட தான் தினமும் என்னை வந்து சந்தித்து பேசுகிறார்கள். நயினார் நாகேந்திரன் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் என்னிடம் பேசுகிறார். நான் சட்டமன்றத்தில் எப்போதும் அவருடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லைஎன்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இதுவரை விளக்கமளிக்கவில்லை.

இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல முயன்றபோது, பேச அனுமதி கொடுக்க சபாநாயகர் அப்பாவு மறுக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஜனநாயகப் படுகொலை.

டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கிறார்கள். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.5000-க்கும் மேல் ஊழல் நடைபெறுகிறதுஎன்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.