பாஜக சார்பில் போராட்டம்!

Aug 21, 2024 - 00:01
 15
பாஜக சார்பில் போராட்டம்!

மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் மருத்துவமனையிலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கு இந்தியாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது . அதற்கு முன்பாக மகளிர் அணி சார்பில் மெழுகுவர்த்தி எழுதி அஞ்சலி செலுத்தப்பட்டது .

இதன் பின்னர் மேற்கு வங்க முதல்வரை கண்டித்தும் அவர் பதவி விலக கோரி மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது.