வெளிநாடு செல்வோருக்கு குட் நியூஸ்....மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!
வெளிநாடு செல்லும் அனைவருக்கும் வரி அனுமதிச் சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடு செல்லும் அனைவரும் வரி அனுமதிச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனைத்தொடர்ந்து, நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் வரி பாக்கி அதிக அளவில் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வரு அனுமதிச் சான்றிதழ் தேவை என நேற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வருமான வரித்துறையின் 2004 அறிக்கையின் படி, கடுமையான நிதி முறைகேடுகள் மற்றும் வருமான வரி, சொத்து வரிச்சட்டம் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக ஆஜராகவோ வரியைச் செலுத்தவோ தேவையிருக்கும் பட்சத்தில் அல்லது ஒரு நபரின் நேரடி நிலுவை ரூ. 10 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை நிறுத்தி வைக்கபடாமல் இருப்பது போன்ற வழக்குகளில் மட்டுமே வரி அனுமதிச் சான்றிதழ் வாங்க வேண்டும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.