பிரதோசம் என்றால் என்றால் என்ன ? அன்று ஏன் சிவபெருமானை வழிபடவேண்டும்?
தென்னாட்டுடைய சிவனே போற்றி

பிரதோசம் என்றால் என்றால் என்ன ? அன்று ஏன் சிவபெருமானை வழிபடவேண்டும்?
இந்தியாவில் சைவ சமயத்தில் சிவபெருமானை கடவுளாக வழிபட்டு வருகின்றறனர். ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் , பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரக்கூடிய அமிர்தத்தை உண்டால் மரணமில்லா வாழ்க்கை வாழலாம் என மகாவிஷ்ணு கூற, தேவர்கள் அமிர்தத்தை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என தயாராகினர். ஆனால் அது கடினமான வேலை என தெரிந்து கொண்ட தேவர்கள் அசுர்களையும் இதில் பங்கேற்க அழைத்தனர்.
பின்னர், தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கடைய ஒத்துழைத்து, பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும், வாசுகி சர்ப்பத்தை கயிறாகவும் பயன்படுத்திக் கடையத் தொடங்கினர்.
பாற்கடலை கடைந்த போது வெளிவந்த விஷத்தை சிவபெருமான் அருந்தி உலகை காப்பாற்றினார். அதனால்தான் சிவன் நீலகண்டர் என அழைக்கப்படுகிறார்.
அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தேவர்கள், சிவனை வழிபட்ட நேரமே பிரதோஷம் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதசி திதியில் மாலை 4 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலமாக வழிபடுகிறோம்.
பொதுவாவாக பிரதோஷம் அன்று தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள புராதன மாரிஅம்மன் கோவிலில் MGR நகரில் உள்ள சிவனுக்கு இன்று பால் , தயிர் , மஞ்சள் குங்குமம், தேன் விபூதி உள்ளிட்ட 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து நந்தி பெருமானுக்கும் அபிஷேகம் மாற்றம் ஆராதனை நடைபெற்றுது .
பிரதோஷ காலத்தில் சிவபெருமானை நந்தியின் இருகொம்புகளுக்கு இடையே வழிபடுவர் . நந்தியின் காதில் வேண்டிக்கொண்டால் அது சிவபெருமானுக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டு பக்க்தர்களின் வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.
குறிப்பாக சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை மகா சனி பிரதோஷம் எனவும் சொல்வதுண்டு. இந்த நாளில் சிவனை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி விடும்..
அதுமட்டுமில்லாமல் , கல்வி, செல்வம், குடும்பம், நோய், உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் சனி பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட்டு வந்தால் அணைத்தும் பூர்த்தியாகும் என கூறப்படுகிறது.
ஹாரா ஹாரா பார்வதி பதேயே சங்கர மஹாதேவ, தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!