வரும் 17ம் தேதியில் சூரியனின் சஞ்சாரம்; 12 ராசிகளுக்கான பலன்கள்!
கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குடியேறுகிறார்

வரும் 17ம் தேதியில் சூரியனின் சஞ்சாரம்; 12 ராசிகளுக்கான பலன்கள்!
வரும் அக்டோபர் 17ம் நாள், சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குடியேறுகிறார். சூரியனின் இந்த சஞ்சாரம், யாருக்கு என்ன பலன் அளிக்கும்? எந்த ராசிக்கு எந்த வகையான பலன்களை அளிக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
மேஷம் :
மேஷ ராசியினருக்கு கூட்டணி மற்றும் கூட்டாண்மையில் வெற்றி கிடைக்கும் காலமாக இது பார்க்கப்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் 7-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் சூரியன், குடும்ப வாழ்க்கை மற்றும் கூட்டு முயற்சியில் செய்யும் தொழில் வாழ்க்கையில் வெற்றிகளை கொண்டு வருகிறார். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளிடம் இருந்து அழுத்தங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள பிரச்சனைகள் தீரும்.
ரிஷபம் :
ரிஷப ராசியினரின் ஜாதகத்தில் 6-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் சூரியன், அவர்களின் உடல் நலனில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை கொண்டு வருகிறார். பணிச்சுமை அதிகரிக்க கூடும், இருப்பினும் உங்கள் சாதுரியத்தால் இந்த சவால்களை சமாளித்து மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி காண்பீர்கள். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள், பணத்தை கடனாக கொடுப்பதும் - வாங்குவதும் கூடாது. பெரிய முதலீடுகளையும் தவரித்திடுங்கள்.
மிதுனம் :
மிதுன ராசியினர் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வரும் ஒரு கிரக நிலை மாற்றமாக இந்த சூரியன் பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. உங்கள் ராசியில் 5-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் சூரியன், தொழில் வாழ்க்கை மற்றும் மண வாழ்க்கை இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வருவார். மாணவர்களின் செயல் திறன் மேம்படும், பள்ளி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள். சிறந்த மாணவர் எனும் பெயர் எடுப்பார்கள்.
கடகம் :
கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் சூரியன், கடக ராசியினர் வீட்டில் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டு வருகிறார். குடும்ப உறவுகளின் தேவைகள் மற்றும் உங்களின் தனிப்பட்ட தேவைகள் பூர்த்தியடையும். நிதி ரீதியாகவும் எதிர்பார்த்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும். இருப்பினும் குறித்த இந்த காலத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும், வருமானம் பாதிப்படையும், வருவுக்கு அதிகமாகவே செலவுகளும் அதிகரிக்கும்.
சிம்மம் :
சிம்ம ராசியினரின் வாழ்க்கையில் தடுமாற்றம் அதிகரிக்கும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. சிம்ம ராசியினர் ஜாதகத்தில் 3ம் இடத்தில் சூரியன் பலவீனமான நிலையை அடைய, உங்கள் தன்னம்பிக்கை குறையும், வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகள் சில உங்கள் விருப்பங்களுக்கு மாறான முடிவுகளை பரிசாக அளிக்கலாம். பயணங்கள் பல செய்ய வேண்டி இருக்கும். தொழில்முறை பயணங்கள் கலவையான பலன்களையும், கவலையையும் கொண்டு வரும்.
கன்னி :
கன்னி ராசியினரின் பேச்சாற்றல் மற்றும் நிதி நிலையை பாதிக்கும் ஒரு கிரக நிலை மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. பேச்சாற்றல் மேம்பட, வார்த்தைகளை பயன்படுத்தி வெற்றிகள் பல காண்பீர்கள். இருப்பினும் அதேநேரம், செலவுகளும் உங்கள் சேமிப்புகளை பாதிக்கும். அநாவசிய செலவுகளை தவிர்த்திடுங்கள், ஆடம்பர விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். முடிந்தளவுக்கு சிக்கனமாக இருப்பது, எதிர்பார்த்த பலன்களை கொண்டு வரும்.
துலாம் :
தொழில் வாழ்க்கையில் காணப்படும் போட்டிகள் உங்களை சோர்வடையச் செய்யலாம். நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதங்கள், மனஸ்தாபங்கள் வந்துச் செல்லலாம். தேவையற்ற போட்டிகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க போதுமான ஓய்வு எடுக்க முயற்சி செய்யுங்கள். மன அழுத்தம் உண்டாக்கும் விஷயங்களில் இருந்து விலகி இருங்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசியினரின் ஜாதகத்தில் 12-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் சூரியன், அவர்களின் வெளிநாட்டு பயணங்களை உறுதி செய்கிறார். அதாவது, படிப்புக்காக வெளிநாடு செல்வது, உயர் கல்விக்காக வெளிநாடு செல்வது போன்ற சாத்தியக்கூறுகளை உண்டாக்குகிறார்.
திடீர் வருமானம் அதிகரிக்கும், உங்கள் நிதி நிலையும் சிறப்பாக மாறும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் ஒரு சிறப்பு தினமாக இன்று அமையும் எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தனுசு :
சாகச பிரியர்களான தனுசு ராசியினர் வாழ்க்கையில் பெற்றோர் ஆதரவை கொண்டு வரும் இந்த சூரியன் பெயர்ச்சி, அவர்களின் ஜாதகத்தில் 11-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. சூரியனின் பார்வை, செல்வாக்கு மிக்க மனிதர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப உறவுகள் மத்தியில் ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயர், மதிப்பும் - மரியாதையும் கிடைக்கும் காலமாக இது அமையும்.
மகரம் :
மகர ராசியினரின் தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்டு வரும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும், கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும் ஒரு காலமாகவும் இது பார்க்கப்படுகிறது. உறவில் நம்பகத்தன்மை அதிகரிக்கும், சவால்கள் குறையும், தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை உண்டாக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
கும்பம் :
கும்ப ராசியினர் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் இந்த சூரியன் பெயர்ச்சி, கல்வித்துறையில் சிறந்து விளங்கும் வாய்ப்புகளை கொண்டு வருகிறது. குறிப்பாக, ஆய்வு சார்ந்த படிப்பு படித்து வரும் மாணவர்களின் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரும்; அரசு உதவித் தொகையுடன் வெளிநாட்டில் உயர் கல்வி படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். மருத்துவம், ஆய்வு தொடர்பான பணியில் இருக்கும் நபர்கள், தங்கள் துறையில் சிறந்து விளங்கும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது.
மீனம் :
மீன ராசியினரின் வாழ்க்கையில் போட்டிகள் அதிகரிக்கும். குறிப்பாக, தொழில் வாழ்க்கையில் போட்டிகள் அதிகரிக்கும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. மீன ராசியினர் ஜாதகத்தில் 8-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் சூரியன், பணியிடத்தில் பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உண்டாக்குகிறார். வழக்கமான பணிகளில் சிறந்து விளங்குவீர்கள், கூடுதல் பணிகளை எடுத்து செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். இதனிடையே ஆன்மீகம் தொடர்பான விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும்.