அடிப்படை அறிவு இல்லாம பேசக்கூடாது....... முதல்வர் நாற்காலியில் உக்காரவே ஈபிஎஸ்க்கு தகுதியில்ல

4 ஆண்டுகள் வகித்த அவருக்கு இந்த அடிப்படை அறிவுகூட இல்லை

Jun 16, 2025 - 18:11
 34

அடிப்படை அறிவு இல்லாம பேசக்கூடாது....... முதல்வர் நாற்காலியில் உக்காரவே ஈபிஎஸ்க்கு தகுதியில்ல 

தமிழகத்தின் பாதுகாப்பைச் சீர்குலைத்துச் சீரழிவு ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அரசைக் குறை சொல்ல எந்த அருகதையும் கிடையாது - அமைச்சர் சிவசங்கர்

 சக்கரவர்த்தி வழக்கில் 3வது நாளே முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை காவல் துறை கைது செய்துவிட்டது - அமைச்சர் சிவசங்கர்

 பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் அதனை கொலை வழக்காக மாற்றி போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர், இதுதான் நடைமுறையும் கூட

 காவல் நிலையம் பக்கம் ஒதுங்காத, நாளேடு படிக்கும் பாமர மக்களுக்குக் கூட தெரியும் இந்த உண்மை, உள் துறையை தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை.

 காவல் துறை பொறுப்பை 4 ஆண்டுகள் வகித்த அவருக்கு இந்த அடிப்படை அறிவுகூட இல்லை அவர் முதல்வர் நாற்காலியில் அமரவே தகுதியில்லாதவர் - அமைச்சர் சிவசங்கர்

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களே கூறுகிறது - அமைச்சர் சிவசங்கர்

கேடுகெட்ட ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் அமைதியும் வளர்ச்சியும் இருந்ததாக வாய் கூசாமல் பொய் சொல்கிறார்.

 துப்பாக்கி கலாச்சாரம் பற்றியெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசலாமா அதிமுக ஆட்சியில் துப்பாக்கி மலிவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டதும், அதை வாங்கி கொலைச் சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.