செங்கோட்டையன், ஆதராவளர்கள் அதிமுகவில் இருந்து விடுவிப்பு!
அதிமுக பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

செங்கோட்டையன், ஆதராவளர்கள் அதிமுகவில் இருந்து விடுவிப்பு!
அதிமுக பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் செய்து ஈபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்.
நேற்று பொதுவெளியில் அதிமுக குறித்து வெளிப்படையான கருத்துகளை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் செங்கோட்டையன் விடுவிப்பு.
செங்கோட்டையன் ஆதரவாளர்களும் அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புரமணியன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர மூர்த்தி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், அத்தானி பேரூராட்சி செயலாளர் ரமேஷ் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் அடுத்த நடவடிக்கை செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கட்சியை பலப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கட்சி சார்ந்த கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து வருவது கண்டனத்திற்குரியது என ஏற்கனவே ஈபிஎஸ் கூறியிருந்தார்.