எம்.ஜி.ஆர் இடத்தை எவனாலும் பிடிக்க முடியாது! வெல்லப்போவது நாம் தான் - அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ
ரசிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக வரவில்லை

கொள்கையை அடமானம் வைத்து கூட்டணியா? வெல்லப்போவது நாம் தான் - அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழக வெற்றி கழகத்திற்கு வரக்கூடிய கூட்டம் ரசிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக வரவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
எந்த கூட்டத்தையும் கண்டு அதிமுகவினர் பயப்பட வேண்டாம், எம்.ஜி ஆர் க்கு கூடிய கூட்டத்தை தற்போது எவனாலும் வெல்ல முடியாது.
தற்சமயம் பத்திரிகையும் ஊடகங்களும் விலை போய் உள்ளது இந்த கட்சியில் மூன்றாம் தலைமுறை வருகை தந்துள்ளது.
என்றும் அதிமுக தான் நாம்தான் அடுத்தது வெல்லப் போவது நமது கட்சி எழுச்சியோடு உள்ளது.
நான் முதல்வன் திட்டம் என வாயில் நுழையாத பல திட்டங்கள் உள்ளன ஆனால், அதனால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. என்னன்னவோ திட்டங்கள் வருகிறது ஆனால், அவற்றால் மக்களுக்கு என்ன பயண் இருக்கிறது.
விலைவாசி அளவுக்கு அதிகமாக உள்ளது பல்வேறு துறைகளில் பல கோடிகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள் அவர்களுக்கெல்லாம் வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது அதெல்லாம் எப்படி ஓட்டாக மாறும் எனவும் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.