11-வது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி..... நாட்டிலேயே இதுதான் முதல் முறை!

பாஜக – காங்கிரஸ் சொல்லும் காரணம்?

Feb 14, 2025 - 14:38
 10
11-வது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி..... நாட்டிலேயே இதுதான் முதல் முறை!

11-வது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி.....

நாட்டிலேயே இதுதான் முதல் முறை 

பாஜக – காங்கிரஸ் சொல்லும் காரணம்?

நாட்டிலேயே குடியரசுத் தலைவர் ஆட்சியை அதிக முறை எதிர்கொண்ட மாநிலமாக மணிப்பூர் திகழ்கிறது. 

அந்த வகையில் வடகிழக்கு மாநிலமான மனிப்பூரில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில் 11வது முறையாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

ணிப்பூரின் 11 வது குடியரசு ஆட்சி முறை குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த 1 அரை ஆண்டுகளாக மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் சமூகத்தினருக்கும் மற்றும் சிறுபான்மை குக்கி சமூகத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலம் மற்றும் செல்வாக்கு தொடர்பாக, இன ரீதியான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வன்முறை, மோதல்களுக்கு பஞ்சமில்லாத மாநிலமாக திகழ்ந்து வருகிறது மணிப்பூர்.

கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் இரு சமூகத்தினரிடையே உருவான மோதல் இன்னும் முடிவுக்கு வராமல் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தான் மனிப்பூர் முதலமைச்சராக இருந்த பிரைன் சிங் தனது பதவியை கடந்த 9ம் தேதி ராஜினாமா செய்தார்.

புதிய முதலமைச்சரை பாஜக அறிவிக்காத நிலையில் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற காலக்கெடு கடந்த 12ம் தேதியோடு முடிவடைந்தது.

இந்த சூழலில் தான் மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.

மணிப்பூர் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 11வது முறையாக மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக 2001 ஜூன் 2ம் தேதி முதல் 2002 மார்ச் 6ம் தேதி வரை மொத்தம் 277 நாட்கள் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் மணிப்பூரில் முழுமையாக ஆட்சி செய்ய முடியாது என்பதை பாஜக தாமதாக ஒப்புக்கொண்டிருப்பதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இனி மணிப்பூருக்கான தனது நேரடி பொறுப்பை பிரதமர் மோடி மறுக்க முடியாதென குறிப்பிட்டுள்ள ராகுல் இறுதியாக மணிப்பூருக்கு சென்று அமைதியையும், இயல்பு நிலையையும் மீட்டெடுப்பதற்கான தனது திட்டத்தை மணிப்பூர் மற்றும் இந்திய மக்களுக்கு விளக்கிச் சொல்ல முடிவு எடுத்து  விட்டாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு இந்திய அரசு மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது.

இவ்வகை மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது.

இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது. மாநில சட்டப்பேரவையில் எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம்.