3 நாட்கள் கழித்து, விஜய் வெளியிட்ட வீடியோ…இதனால் தான் நான் வெளியில் வரவில்லை!

ஆதரவு அளித்த அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி

Sep 30, 2025 - 17:10
 34
3 நாட்கள் கழித்து, விஜய் வெளியிட்ட வீடியோ…இதனால் தான் நான் வெளியில் வரவில்லை!

3 நாட்கள் கழித்து, விஜய் வெளியிட்ட வீடியோ…இதனால் தான் நான் வெளியில் வரவில்லை!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து 3 நாட்கள் கழித்து தற்போது எக்ஸ் பக்கதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

இந்த வீடியோவில் இதுவரை 5 மாவட்டத்தில் தான் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் கரூரில் மட்டும் இப்படி நடந்ததற்கு காரணம் என்ன என்கிற உண்மை விரைவில் வெளியே வரும் என தெரிவித்துள்ளார்.

இந்த துர்மரணத்திற்கு மன்னிப்பும், இந்த நேரத்தில் தனக்கு ஆதரவு அளித்த அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும், கரூர் மக்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் கடவுளே நேரில் வந்து பேசியது போல் இருந்தது என உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும், தவெக இன்னும் பலமாகவும், தைரியத்தோடும் தொடரும் என பேசியுள்ளார்.

விஜய் இதுவரை எந்த ஆறுதலும் கூறவில்லை சம்பவ இடத்திற்கு வந்து மக்களை சந்திக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்றிருந்தால் அசம்பாவிதங்கள் நடந்திருக்கும் எனவும் அதை தடுக்கவே நேரில் செல்லவில்லை என பதிலளித்துள்ளார்.