கூட்டணியில் குழப்பம் - திணரும் திமுக!

இடதுசாரிகளுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

Dec 31, 2025 - 12:49
 16
கூட்டணியில் குழப்பம் - திணரும் திமுக!

கூட்டணியில் குழப்பம் - திணரும் திமுக!

 

காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் திருமாவளவன், வைகோ தலையீடு வேண்டாம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   

கூட்டணி கட்சியின் உட்கட்சி செயல்பாடுகளை பொதுவெளியில் விமர்சிப்பது ஆபத்தானது என்றும், கூட்டணி தர்மம் அனைவருக்குமானது; காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.  

விசிக, மதிமுக, இடதுசாரிகளுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

பாஜகவை வலுப்படுத்தும் நோக்கத்தில் திருமாவளவன் மற்றும் வைகோ செயல்பட வேண்டாம்.  

விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பதை ஊடகம் வாயிலாக தெரிந்து கொண்டேன்.  

பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம், விஜய், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பெயர்கள் மாணிக்கம் தாகூரின் பதிவில் இடம்பெறவில்லை.  

காங்கிரஸின் உட்கட்சி விவகாரங்களில் கூட்டணி கட்சிகள் இடம்பெற கூடாது என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.