நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – போலீசார் தேடுதல் வேட்டை
ஐடி ஊழியருடன் தகராறு

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – போலீசார் தேடுதல் வேட்டை
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு, தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே விசாரணைக்கு ஆஜரவதற்கு முன்னரே நடிகை லட்சுமி மேனன் தலைமறைவானதால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளாவின் எர்ணாகுளத்தில் மதுபானம் பார் ஒன்றில் ஐடி ஊழியர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் அவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அவரை கடத்திய வழக்கில் மிதுன், அனீஷ் மற்றும் சோனா ஆகியோர் கைதாகி உள்ளனர். இந்த கும்பலுடன் நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்பு உள்ளது என தகவல் வெளியானதையடுத்து, போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், லட்சுமி மேனன் தலைமறைவாகி உள்ளார். எனவே போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.