ஸ்டாலினுக்கு எதற்கு பயம், பதற்றம்? – ஈபிஎஸ்
ஒருநபர் ஆணையம் எப்படி சுதந்திரமாக செயல்படும்?

ஸ்டாலினுக்கு எதற்கு பயம், பதற்றம்? – ஈபிஎஸ்
கிட்னி முறைகேடு உறுதி செய்யப்பட்ட பிறகும், அரசு அவசரமாக செயல்படாதது ஏன்? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது.
அரசு அதிகாரிகள் பேட்டி கொடுத்த பிறகு, ஒருநபர் ஆணையம் எப்படி சுதந்திரமாக செயல்படும்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், முதலமைச்சருக்கு உள்ள அதே உணர்வோடு தான் நானும் பேசுகிறேன்.
சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் திமுகவிற்கு பயம், பதற்றம் வந்துவிட்டது. ஆட்சியில் நடைபெற்ற தவறை மறைப்பதற்காக பயத்திலும், பதற்றத்திலும் ஏதேதோ சொல்கிறார் ஸ்டாலின். வேண்டுமென்றே திட்டமிட்ட சதி தான் கரூர் உயிரிழப்பு சம்பவம்.
அனைத்து இடங்களிலும், மக்களிடமும் அரசியலாக மட்டுமே பார்க்கிறது திமுக.
கரூர் துயரத்தில் போது திமுக ஸ்டிக்கர் ஒட்டிய ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.