ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா சந்திப்பு; அடுத்த நகர்வு என்னவாக இருக்கு? பரபரக்கும் அரசியல் களம்!
ஒரே காரில் பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் பயணம்
ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா சந்திப்பு; அடுத்த நகர்வு என்னவாக இருக்கு? பரபரக்கும் அரசியல் களம்!
ஒரே காரில் பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் பயணம் செய்வது அரசியல் களம் மத்தியில் பல்வேறு கேள்வியை எழுப்பியுள்ளது.
இவர்களுடன் டிடிவி தினகரனும், பசும்பொன்னிற்கு செல்ல உள்ளதாகவும் இவர்கள் மூவரும் இணைந்து அங்கே சசிகலாவை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பழைய நண்பர்கள் ஒரே வாகனத்தில் சென்றிருக்கலாம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இவர்கள் மூவரும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து செங்கோட்டையனின் பதவி மட்டும் பறிக்கப்பட்டிருந்தது.
விரைவில் கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்தும் நீக்கப்படலாம் எனவும் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக ஒன்றினைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த செங்கோட்டையன் அதற்கான அடித்தளம் தான் இந்த சந்திப்பா எனவும் சந்தேகிக்கும் வகையில் உள்ளது.
மூவரும் சந்திப்பது உறுதியா? இந்த சந்திப்பில் என்னென்ன பேச்சுவார்த்தைகள் இருக்கும் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது பல தரப்பிலிருந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
