சுயமரியாதை பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்க தேவர் – பிரதமர் மோடி புகழஞ்சலி
அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கிறது
சுயமரியாதை பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்க தேவர் – பிரதமர் மோடி புகழஞ்சலி
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்திவிழாவும், 63வது குருபூஜையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் துணை ஜனாநிதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாதக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாய அமைப்பினர் பலறும் தேவர் சிலைக்கு மாலை அனுவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கவிஞர் வைரமுத்து, மல்லை சத்யா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முளைப்பாரி பால் குடம் எடுத்தும் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நடைபெற்று வரும் தேவர் ஜெயந்தி விழாவில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டு தற்போது வரை மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும், சமூக வாழ்வில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன் என பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
நீதி, சமத்துவம் ஏழைகள் நலனுக்காக அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கிறது எனவும் கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதை பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்க தேவர் எனவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
