மக்களை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை….. இனிமேல் தான் தவெக ஆட்டமே!
ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்
மக்களை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை….. இனிமேல் தான் தவெக ஆட்டமே!
தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தவெக தரப்பில் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 2 ½ மணி நேரம் நடத்தப்பட்ட கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசினோம். நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு நீதிமன்றம் அனுமதிக்கும்பட்சத்தில் விஜய்யின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடரும்.
பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் அடுத்த பிரச்சாரத்திற்கு திட்டமிட்டிருக்கிறோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதை, தவெக தொடர்ந்து எதிர்க்கிறது.
நாங்கள் தலைமறைவாக இல்லை பாதிக்கப்பட்ட 41 பேர் குடும்பங்களை சந்திப்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தி வந்தோம்.
கரூர் சம்பவம் நடைபெற்ற பிறகு கரூருக்கு செல்ல எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை சாலைகளில் செல்லும் வழிகளும் மறுக்கப்பட்டது.
எங்கள் கட்சியை முடக்க வேண்டுமென திட்டமிடுகிறார்கள் அது 100% நடக்காது மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் எனவும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
