குடியரசு தலைவரின் ஆட்சி வாபஸ்!

Oct 14, 2024 - 18:26
 5
குடியரசு தலைவரின் ஆட்சி வாபஸ்!

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவரின் ஆட்சி விளக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் இருந்த குடியரசுத் தலைவரின் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

ஓரிரு நாட்களில் ஒமர் அப்துல்லாவின் ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்க அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

முன்னதாக அக்டோபர் 11 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்தார் ஒமர் அப்துல்லா. அப்போது தனது கட்சி எம்.எல்..க்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக விரைவில் பதவியேற்க இருக்கிறார் ஒமர் அப்துல்லா.