இது கூடவா என்னால் முடியாது… இன்னும் ஆட்டுக்குட்டி விற்கிறேன்!
அரசியலும் செய்வேன், அறக்கட்டளையும் நடத்துவேன்!
இது கூடவா என்னால் முடியாது… இன்னும் ஆட்டுக்குட்டி விற்கிறேன்!
2 லட்ச ரூபாய் முதலீடு செய்ய முடியாத அளவிற்கா நான் இருக்கின்றேன். தொழிலும் செய்வேன், அரசியலும் செய்வேன், அறக்கட்டளையும் நடத்துவேன், விவசாயமும் செய்வேன்.
நீங்களும் செய்யுங்கள். உங்களுடைய சொந்த காசில் நன்றாக வாழுங்கள், தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள்.
டிரெயினில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கின்றார்கள். நிறுவனங்களில் பங்கு தொகை இரண்டு லட்சம் வரை முதலீடு செய்து இருக்கின்றேன். ஆன்லைனில் கம்பெனிகளில் எவ்வளவு பங்கு முதலீடு என்பதை பாருங்கள்.
என் மனைவி வேலை செய்கிறார் நான் விவசாயம் செய்கிறேன் 10 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி கையிருப்பில் பணம் வைத்திருக்கிறேன். எனது அப்பா, அம்மா விவசாயம் செய்கிறார்கள் இப்பொழுதும் ஆட்டுக்குட்டி விற்பனை செய்கின்றோம் என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
