மல்லை சத்யாவின் புதிய கட்சி ; இணைந்த முக்கிய புள்ளிகள்!

திராவிட வெற்றிக் கழகம்

Nov 20, 2025 - 16:01
 9
மல்லை சத்யாவின் புதிய கட்சி ; இணைந்த முக்கிய புள்ளிகள்!

மல்லை சத்யாவின் புதிய கட்சி; இணைந்த முக்கிய புள்ளிகள்! 

மதிமுகவின் துணை பொதுச்செயலராக இருந்த மல்லை சத்யா அக்கட்சியில் இருந்து நீக்கம். மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார் மல்லை சத்யா.

திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார் மல்லை சத்யா. வைகோவின் மகன் துரை வைகோவிற்கும் மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஏற்கனவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து விலகியவர்களை இணைத்து புதிய கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.  

இந்த நிலையில், சென்னை அடையாரில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். மதிமுகவில் இருந்து வெளியேறிய அழகு சுந்தரம், நாஞ்சில் சம்பத், திருப்பூர் துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.