களத்துக்கு வந்து பேசுங்க விஜய் – பவர் ஸ்டார்
விஜய் பேசுவது மிகவும் தவறு

களத்துக்கு வந்து பேசுங்க விஜய் – பவர் ஸ்டார்
விஜய்க்காக கூடும் கூட்டத்தை வைத்து எதையும் கூறிவிட முடியாது எனக்கும் கூட்டம் சேர்கிறது களத்துக்கு வாங்க விஜய் என பவர் ஸ்டார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
வரும், 2026 தேர்தலில் விஜய் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்து நிற்க நான் தயார் விஜய்யும் இதற்கு தயாரா? எனவும், நான் கட்சி தொடங்கவில்லை ஒருவேளை பெரிய கட்சி என்னை அழைத்தால் அவர்கள் சார்பில் நான் நிற்பேன் திமுகவில் வாய்ப்பு கிடைத்தாலே போவேன் எனவும், அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது நிரந்தர நண்பனும் கிடையாது சும்மா வசனம் பேசக்கூடாது. நாளை கூட்டணி என அழைத்தால் விஜய் செல்லாமல் இருப்பாரா உடனே செல்வார் அவ்வளவுதான்.
விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார் இந்த நேரத்தில் அவர் கட்சி குறித்தும், கொள்கை குறித்தும் மட்டும் தான் மக்களிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர, வந்தவுடன் அவர்கள் தான் எதிரி என கடுமையாக பேசுவது மிகவும் தவறு அவர்களுடைய அனுபவம் தான் விஜய்யின் வயது.
தமிழக முதல்வரை நான் மிகவும் உண்மையாக நேசிக்கிறேன் ஸ்டாலின் குறித்து விஜய் பேசியது வருத்தமளிக்கிறது. சக நடிகர்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் முதலில் உதவி செய்யுங்கள் அதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கும் செய்வேன் என்று சொன்னால் மட்டும் போதாது.
நானும் கட்சி தொடங்கி எம்.பியாக நின்றேன் எனக்கு இதை விட அதிக கூட்டம் இருந்தது அப்போது அவரது தந்தையை எதிர்த்து நின்றேன் இப்போது விஜய்யை எதிர்த்து நிற்கவும் தயார் என பவர் ஸ்டார் தெரிவித்துள்ளார்.