மீண்டும் களம் இறங்கும் விஜய்…. பிரச்சார தேதி அறிவிப்பு!

3 இடங்களை குறிப்பிட்டு கடிதம்

Nov 20, 2025 - 17:41
 8
மீண்டும் களம் இறங்கும் விஜய்…. பிரச்சார தேதி அறிவிப்பு!

மீண்டும் களம் இறங்கும் விஜய்…. பிரச்சார தேதி அறிவிப்பு!

டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் தவெக தலைவர் விஜய் மீண்டும் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

பிரச்சாரத்திற்காக பழைய பேருந்து நிலையம் அருகே போஸ் மைதானம், கோட்டை மைதானம், தாளமுத்து நடராசர் இல்லம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  

இந்த 3 இடங்களை குறிப்பிட்டு அதில் ஒரு இடத்தை விஜய் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி தவெக கடிதம்.

பிரச்சாரமானது பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

1 மாதத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், சேலத்திலிருந்து தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.