தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 7,000 கொலைகள் – நயினார் நாகேந்திரன்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 7,000 கொலைகள் – நயினார் நாகேந்திரன்
சென்னை :
தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் 7,000 கொலைகள் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர், “இந்த ஆட்சியை மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “சட்டம்-ஒழுங்கை காக்கத் தவறிய திமுக அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக மக்களின் உயிருக்கும் சொத்துகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத அரசு பதவியில் தொடர தகுதியற்றது” என அவர் வலியுறுத்தினார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து, தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த விவாதத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இலக்கியா சக்திவேல்
